கொரோனா நோயாளியை ஏற்றிச்சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்த பயங்கரம்!!

1148


விமான விபத்து..



தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கொரோனா நோயாளியை ஏற்றிச்சென்ற விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Diamantina விமான நிலையத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது.



São Paulo நகரத்திலிருந்து வந்த விமானத்தில் மருத்துவர், செவிலியர், விமானி, துணை விமானி என நான்கு பேர் பயணித்துள்ளனர். விமானம் Diamantina நகரில் உள்ள ஜே.கே விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்துள்ளது.




விமானத்தில் பயணித்த செவிலியர் João Carlos Barbosa (35), மருத்துவர் Amanda Gabriela Dourado (24), துணை விமானி Eduardo Valim Macena (30) ஆகியோர் காயத்துடன் உயிர் தப்பியுள்ளனர். விமானி Mauricio de Carvalho (32) காயம் ஏதுமின்றி உயிர்தப்பியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


விபத்துக்குள்ளான விமான் பயங்கர சத்தத்துடன் தீப்பற்றி எரிந்தததை அடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த மீட்பு மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தினர்.

கொரோனா நோயாளியை ஏற்றிச்சென்ற போது விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. எனினும், கொரோனா நோயாளி யாரும் அனுப்பப்படவில்லை என São Paulo நகரில் உள்ள முக்கிய இரண்டு மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


விபத்தை அடுத்து சம்பயிடத்திற்கு விரைந்து அதிகாரிகள் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விமானத்திற்கு உரிமையாளரான Vidas Set Taxi Aéreo என்ற நிறுவனம் விபத்து குறித்து விசாரிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் ஒரு குழுவை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.