நியூஸிலாந்தில் இலங்கை இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜூரி சபை ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நியூஸிலாந்து ஒக்ஸ்போர்ட் பகுதி வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இலங்கையைச் சேர்ந்த சமீர சந்திரசேன உயிரிழந்தமை குறித்து கைது செய்யப்பட்டுள்ள இரு இலங்கையர்கள் தொடர்பில் இச்சபை விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது
23 மற்றும் 33 வயதுடைய இலங்கையர்களே குறித்த மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டனர்.
தீ விபத்து ஏற்பட்ட நாளன்று சந்திரசேன வீட்டில் கலவரம் இடம்பெற்றுள்ளதாக ஒக்ஸ்போர்ட் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
28 வயதுடைய சமீர சந்திரசேன கடந்த வியாழக்கிழமை தனது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், தீ ஏற்படுவதற்கு முன்னர் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறிய ஒக்ஸ்போர்ட் பகுதியில் சமீர சந்திரசேன, சாமி என்ற பெயரில் பிரபலமானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.