இலங்கையி சர்வதேச விமான நிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு!!

814

சர்வதேச விமான நிலையங்கள்..

இலங்கையின் அனைத்து சர்வதேச வானூர்தி நிலையங்களும் 2021 ஜனவரி 23ஆம் திகதி வெளிநாட்டவர்களுக்காக திறக்கப்படவுள்ளன. சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த தகவலை செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வெளியிட்டுள்ளார்.

சுற்றுலாப்பயணத்துறையை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் திட்டத்துக்குள் வானூர்தி தளங்களை திறப்பதும் ஒன்று என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பொது வானூர்தி போக்குவரத்து அதிகாரசபை வெளியிட்ட தகவலின்படி இலங்கையில் உள்ள அனைத்து சர்வதேச வானூர்தி நிலையங்களும் 2020 டிசம்பர் 26ஆம் திகதி திறக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.