வவுனியாவில் மேலும் இருவருக்கு கொரோனா : இன்று மட்டும் 18 பேருக்கு தொற்று உறுதி!!

2944


கொரோனா..


வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இரு சிற்றூழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.



யாழ்ப்பாணம் பரிசோதனை கூடத்திலிருந்து இன்று (13.01.2021) இரவு 7.40 மணியளவில் வெளியான முடிவுகளின் அடிப்படையிலேயே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர் ஒருவருக்கு கொரொனா தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டிருந்தது.அவருடன் தொடர்புகளை பேணிய சில வைத்தியசாலை ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.


அவர்களில் முன்னெடுக்கப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் இருவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. எனினும் இன்று முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலும் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் பட்டாணிச்சூர் பகுதியில் 14 நபர்களும் நகர வர்த்தக நிலைய பரிசோதனையில் 122 நபர்களும் வவுனியா வைத்தியசாலையில் 12 நபர்களும் புளியங்குளத்தில் ஒருவர் என 149 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் வவுனியாவில் கடந்த 10 நாட்களில் மாத்திரம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 18 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இன்று காலை வெளியான செய்தி  >> வவுனியாவில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : தொற்றாளர்கள் 147 ஆக அதிகரிப்பு!!

வவுனியாவில் நகரப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதி முடிவுகள் இன்று (13.01) காலை வெளியாகிய நிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணிபுரியும் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வவுனியாவில் கடந்த 10 நாட்களில் மாத்திரம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளது.