இலங்கையில் ஒன்லைன் ஊடாக கல்வி பயிலும் யுவதிகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

2064

ஒன்லைன் ஊடாக…

நாடு முழுவதும் விபச்சார நடவடிக்கைகளுக்காக ஒன்லைன் ஊடாக யுவதிகளை பயன்படுத்தும் நடவடிக்கை ஒன்று புலனாய்வு பிரிவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்காக தயாரிக்கப்பட்ட இணையத்தளம் ஊடாக மோசமான தொழிலில் ஈடுபடும் யுவதிகளிடம் தினமும் 800 – 1000 ரூபாய் வரையில் பணம் அறவிடப்படுவதாக தெரியவந்துள்ளது.

தற்போது மேற்கொள்ளப்படும் விசாரணைக்கமைய இணையத்தள உரிமையாளருக்கு நாள் ஒன்றுக்கு இது தொடர்பான விளம்பரங்கள் பதிவிடுவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாவுக்கும் அதிக பணம் கிடைப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

ஒன்லைன் தொழில்நுட்பம் ஊடாக கற்கும் பிள்ளைகளை ஏமாற்றி பல்வேறு இடங்களுக்கு அழைத்து பணம் பெறும் நடவடிக்கையிலும் இந்த மோசடி கும்பல் ஈடுபட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பம்பலப்பிட்டிய பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவி ஒருவர் மோசமான நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் பணம் வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையில் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார்.

இந்த மோசடி நடவடிக்கை தொடர்பில் 150 யுவதிகள் தினமும் இணையத்தளத்தில் விளம்பரம் பதிவிடுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த நாட்களில் இந்த சம்பவம் தொடர்பில் 18 யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இணையத்தளத்திற்கு தொடர்புடைய உரிமையாளர் தேடப்பட்டு வருவதுடன், இணையத்தளத்தை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-