ஏழ்வரின் விடுதலையை எதிர்க்காதீர்கள் : முருகனின் தாய் உருக்கமான வேண்டுகோள்!!

622

Muruganஇந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களின் விடுதலைக்கு எதிராக யாரும் வாதாட வேண்டாம் என முருகனின் தாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முருகனின் தாய் சோமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் முருகன் உள்ளிட்ட 7 பேருக்கும் விடுதலை என்ற செய்தி கிடைத்தது. பின்னர், விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

எங்கள் பிள்ளைகளுக்கு எதிராக வாதாடாதீர்கள். கருணை காட்டுங்கள். மனிதாபிமான கருணை உள்ளங்கள் முருகன் மகள் அரித்ராவுக்காக கருணை காட்டுங்கள்.

அவர்களுக்கு எதிராக சட்டத்தை கையில் எடுக்காமல் கருணை காட்டுங்கள். கொலையாளிகள் என்று அவர்களை மீண்டும் கிணற்றில் மூழ்கடித்துவிடாதீர்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.