இலங்கையில் கல்வியை தரம் 13 இல் இருந்து 12 ஆக குறைக்க நடவடிக்கை : கல்வி அமைச்சு கலந்துரையாடல்!!

2287

கல்வி..

தரம் 13 வரையான கல்வி நடவடிக்கைகளை, தரம் 12 வரை மட்டுப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் பின்னர், பெறுபேறுகளை எதிர்பார்த்து மாணவர்கள் பல மாதங்கள் காத்திருப்பதனை கருத்திற் கொண்டே, இந்த விடயம் குறித்து தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது.

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை, தரம் 10ல் நடத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையை, தரம் 12ல் நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

பரீட்சை பெறுபேறுகளை ஒரு மாத காலத்திற்குள் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.