வாட்ஸ் அப் தனது முடிவிலிருந்து பின்வாங்கியது!!

1463


வாட்ஸ் அப்..



வாட்ஸ் அப், தனது தனியுரிமைக் கொள்கையை புதுப்பிக்கும் திட்டத்தை தாமதப்படுத்தியுள்ளதாக சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது.



வாட்ஸ் அப், தனது பயனாளர்களின் தரவுகளை பேஸ்புக்குடன் பகிர்ந்துக்கொள்ளும் வகையில் கடந்த வாரம் ஒப்புதல் பெறும் நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது.




வாட்ஸ் அப், தனது புதுப்பித்தல் விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையை கடந்த மாத இறுதியில் அறிவித்திருந்தது. குறித்த புதிய புதுப்பித்தல் விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையை பெப்ரவரி மாதம் 8ம் திகதிக்கு பின்னர், நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.


இந்த அறிவிப்பை அடுத்து, வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்கள் தமது எதிர்ப்பை வெளியிட ஆரம்பித்திருந்தனர். அதுமாத்திரமன்றி, பெருமளவிலான வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்கள், புதிய செயலிகளை நோக்கி நகர ஆரம்பித்திருந்தனர்.

குறிப்பாக டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகளின் பயன்பாடு கடந்த சில வாரமாக அதிகரித்திருந்தது. வாட்ஸ் அப்பில் தனது தனியுரிமை பாதுகாக்கப்படவில்லை என உணர்ந்த நிலையிலேயே, பயன்பாட்டாளர்கள் மாற்று செயலியை நோக்கி நகர்ந்திருந்தனர்.


இந்த நிலையிலேயே, வாட்ஸ் அப் தனது தீர்மானத்திலிருந்து பின்வாங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.