7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது : வைகோ!!

638

7 perராஜிவ் படுகொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறையில் தடுத்து வைத்துள்ள பேரறிவாளன் உட்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய, தமிழக அரசுக்கு முழுமையாக அதிகாரம் உள்ளது என்று வைகோ தெரிவித்துள்ளார்.

மதுரையில் இருந்து இன்று விமானத்தில் சென்னை சென்ற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது,

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை குறைக்கப்பட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த நடவடிக்கையில் மத்திய அரசு தலையிட முடியாது.

இது தொடர்பாக நேற்று முன்தினம் 3 பேரை விடுவிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் மீதமுள்ள 4 பேரையும் விடுதலை செய்ய மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

7 பேரின் விடுதலையை தடுக்க முடியாது. அவர்கள் விரைவில் விடுதலை ஆவார்கள்.இந்த வழக்கில் வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆஜராகி வாதாடுகிறார்.

7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. இதில் மத்திய அரசு தலையிட முடியாது என்றார்.