13 வயதான பெற்ற மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய்!!

1234

Abuமேற்கு டெல்லியின் பஸ்சிம் விகார் பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமி, பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு முறைப்பாடு செய்துள்ளார்.

பெற்ற தாயே தன்னை வற்புறுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி கொடுமைப்படுத்துவதாக தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

தந்தையை இழந்த அந்த சிறுமியின் 33 வயது தாய் கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் உள்ள மியான்வாலி நகர் பகுதிக்கு அழைத்து சென்று அங்குள்ள 3 வாடிக்கையாளர்களுடன் இருக்கும்படி அவளை மிரட்டியுள்ளார்.

சில வேளைகளில் இயற்கைக்கு மாறான பாலியல் உறவு வைத்துக் கொள்ளும்படி வற்புறுத்திய அந்த கும்பலின் ஆசைக்கு இணங்கிப் போகும்படி மகளை வற்புறுத்திய அந்த பெண், இதற்கு ஒப்புக்கொள்ள சிறுமி மறுத்த போதெல்லாம் ஒரு தனியறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளார்.

இந்த சித்ரவதையை சகித்துக் கொள்ள முடியாத சிறுமி தனது பாட்டியுடன் நேற்று பொலிஸ் நிலையத்துக்கு வந்து தனக்கு நேர்ந்த கொடுமையை விளக்கி புகார் அளித்துள்ளார்.

மியான்வாலி நகரில் தன்னை சீரழித்த அந்த 3 பேரில் இருவரின் பெயர் விபரங்களையும் கூறிய சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

சிறுமியின் தாயாரையும், அவளது வாடிக்கையாளர்கள் 3 பேரையும் கைது செய்ய பொலிஸார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.