இந்திய -அரியானா மாநிலத்தில் மகளின் மின்னஞ்சலில் உள்ள ஆபாச படங்களை பார்த்து தந்தை அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள வங்கியில் மேலாளராக வேலை செய்யும் ஒருவர் பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.
அதில் மர்ம நபர் ஒருவர் எனது மனைவி மற்றும் மகளது ஆபாச படங்களை அவரது மகளின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்துள்ளார் என்றும் அந்த மின்னஞ்சலானது சந்தீப் கோசார் என்ற ஐ.டி.யில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர், மேலும் பொலிசார் விசாரணைக்கு சைபர் கிரைம் உதவியை நாடியுள்ளனர்.




