பாஜக பிரதமர் வேட்பாளர் மோடிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், முஸ்லிம் வாக்காளர்களை கவர புதிய யுக்தியை கையாண்டுள்ளார் நடிகை மேக்னா பட்டேல்.
பொலிவுட்டில் போராடிக் கொண்டிருக்கும் நடிகை மேக்னா பட்டேலை கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை பலருக்கு தெரியாது.
இந்நிலையில் அவர் திடீர் என்று பாஜக பிரதமர் வேட்பாளரான மோடிக்கு ஆதரவு தெரிவித்து நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டார்.
அதன் பிறகு தான் யார் இந்த மேக்னா என்று பலரும் தேட ஆரம்பித்தார்கள். இந்நிலையில் அவர் அடுத்த பப்ளிசிட்டி ஸ்டண்ட்டை செய்துள்ளார்.
முஸ்லிம் வாக்காளர்கள் மத்தியில் மோடிக்கு ஆதரவு திரட்டுகிறேன் என்ற பெயரில் மேக்னா பட்டேல் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.
இம்முறை மேக்னா உடலை மறைக்கும் வகையில் அனார்கலி ஆடை அணிந்து முஸ்லிம் பெண் போன்ற கெட்டப்பில் மோடிக்கு ஆதரவு தேடியுள்ளார்.
அதில், தான் அணிந்திருக்கும் சுடிதாரில் மோடியின் புகைப்படங்களை ஆங்காங்கே ஒட்டியுள்ளார். வாக்களிப்பது அனைவரின் கடமை ஆகும். உங்களின் வாக்குகளை மோடிக்கு அளியுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் மோடியால் தான் இந்தியாவின் சிறந்த பிரதமராக இருக்க முடியும். அதனால் முஸ்லிம் மக்களே மோடியை ஆதரியுங்கள் என்று கூறியுள்ளார்.
இவர் மோடிக்கு ஆதரவாக வெளியிட்டுள்ள காணொளி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் அவர் மோடியை பற்றி பாட்டு பாடிக் கொண்டே நடனம் ஆடியுள்ளார்.





