வவுனியா கோவில்குளம் சிவன் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் நான்காம் நாள் நிகழ்வுகள்!!(படங்கள், வீடியோ)

801

வவுனியா கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் நான்காம் நாளான நேற்று (06-03 -2014) வியாழக்கிழமை காலை முதல் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ரகுநாத கமலேஸ்வர குருக்கள் தலைமையில் அபிசேகங்கள் நடை பெற்று மதியம் எம் பெருமான் திரு வீதியில் இடப வாகனத்தில் எழுந்தருளிய திருக்காட்சி இடம்பெற்று பகல் திருவிழா நிறைவு பெற்றது.

மாலை எல்லாம் வல்ல எம் பெருமான் ஈரேழு உலகங்களையும் ஆட்சி புரிகின்ற கயிலை நாதன் வடிவில் கயிலாயத்தில் அருள்புரிகின்ற கயிலை காட்சிக்குரிய அலங்காரங்கள் அபிசேகங்கள்மாலை 4.30மணிக்கு ஆரம்பமாகி வசந்தமண்டப பூஜையின் பின் மாலை ஏழு மணியளவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் கயிலைத் திருக்காட்சி கொண்டு இடப வாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் மயில் வாகனத்திலும் திருவீதி உலா வந்த நிகழ்வு இடம்பெற்று நேற்றைய திருவிழா இனிதே நிறைவு பெற்றது.

இன்று சமயகுரவர்களுக்கு முக்தி கொடுக்கின்ற பக்தி முக்தி பாவநோர்உறசவம் என்னும் திருவிழா நடை பெற உள்ளது.

-கஜேந்திரன்-

11 12 13 14 15