2023ம் ஆண்டில் இந்தியா 4வது பணக்கார நாடாகும்!!

875

Indiaஎதிர்வரும் 2023ம் ஆண்டில் உலக நாடுகளில் அதிக பணக்காரர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் இருக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த, நைட் பிராங் என்ற தனியார் நிறுவனம் சொத்து மேலாண்மை குறித்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்த நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள பணக்காரர்களின் செல்வ செழிப்பு மற்றும் சொத்துகள் குறித்து ஆய்வு செய்து, 2014 செல்வ செழிப்பு அறிக்கை ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது, வரும் 2023ம் ஆண்டில் உலகிலேயே அதிக அளவில் பணக்காரர்கள் உள்ள நாடாக இந்தியா உருவாகும். உலக நாடுகளில் அதிக பணக்காரர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக இந்தியா 4வது இடத்தில் இருக்கும்.

மேலும் இங்கிலாந்து, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள பணக்காரர்களை விட இந்தியாவில் அதிக பணக்காரர்கள் இருப்பார்கள். இந்தியாவில் 100 மில்லியன் டொலர் அளவிற்கு சொத்து வைத்து இருப்பவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டு 383 ஆக இருந்தது.

இது 2023ல் 761 ஆக அதிகரிக்கும். உலகில், டொப் 10 சிட்டி வரிசையில் மும்பை நகரமும் 2024ம் ஆண்டில் இடம் பிடிக்கும்.

உலகில் உள்ள முக்கிய நகரங்களில் வசிப்பவர்கள் திருட்டு போன்ற குற்றங்கள், மாசு, பயணம் செய்யும் போது ஏற்படும் சிக்கல்கள் மற்றும் தீவிரவாத செயல்கள் போன்றவைகளால் கவலை கொண்டுள்ளனர்.

அதிக மக்கள் தொகை கொண்ட நியூயோர்க், லண்டன், மொஸ்கோ மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் தீவிரவாத நிகழ்வுகளுக்கு உள்ளாகக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.