லண்டனில் அரங்கேறும் நிர்பயாவின் உண்மைக் கதை!!

810

Nirbhaya

டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் லண்டனில் வரும் 12ம் திகதி நாடகமாக அரங்கேறவுள்ளது.

டெல்லி மருத்துவ மாணவி பலாத்கார சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நிர்பயா என்று பெயரிடப்பட்டுள்ள அந்த மாணவிக்கு நேர்ந்த கொடூர சம்பவம் லண்டனில் நாடகமாக நடத்தப்பட உள்ளது.

லண்டனில் உள்ள பிரபல சவுத் பாங்க் அரங்கில் நேற்று நடைபெற்ற நிர்பயா நாடகம் குறித்த சிறப்பு நிகழ்ச்சியில், நாடக ஆசிரியரும் பெண் இயக்குநருமான யேல் பார்பெர் கூறுகையில், டின்பர்க் பிரின்ச் திரைப்பட விழாவில் நிர்பயா நாடகம் வெற்றிகரமாக ஓடியது.

இந்நாடகத்தை பார்த்தவர்கள் அந்த பெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமையை அறிந்து கோபம் அடைந்தனர். இதுபோன்ற கொடுமை வேறு எந்த நாட்டிலும் எந்த பெண்களுக்கும் ஏற்பட கூடாது என்று ஆவேசத்துடன் கருத்து தெரிவித்தனர்.

இந்தியாவில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் சாலையில் நின்று போராடினார்கள்.

இதுபோன்ற குற்றங்கள் நாட்டுக்கு தலைகுனிவையும், அவமரியாதையையும் ஏற்படுத்தும். இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் பலாத்காரம் என்பது பொதுவான நோயாக உள்ளது என்றும் எங்களது நிர்பயா நாடகம், பாலியல் வன்முறைக்கு எதிராக அனைவரையும் ஒன்று சேர்க்கும் சக்தியாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். இந்த நாடகம் வரும் 12ம் திகதி லண்டனில் நடைபெறவுள்ளது.