பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு தெரிவித்த இந்திய மாணவர்கள் மீதான வழக்கு வாபஸ்!!

1270

Ind stu

பங்களாதேஷில் நடைபெற்று வரும் ஆசியக் கிண்ணத் தொடரில் கடந்த ஞாயிற்றுகிழமை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இதனை உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள சுவாமி விவேகானந்தா சுபர்த்தி பல்கலையில் பயிலும் காஷ்மீர் மாணவர்கள் கொண்டாடினர்.

அப்போது பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் மாணவர்களிடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து மாநில நிர்வாகம் குறிப்பிட்ட மாணவர்களை தனி பஸ் மூலம் காஷ்மீர் மாநில எல்லையில் கொண்டு போய் விட்டதுடன் அவர்கள் மீது தேச துரோக வழக்கு போடப்பட்டது.

இதற்கு காஷ்மீர் மாநில முதல்வர் ஓமர்அப்துல்லா கண்டனம் தெரிவித்தததுடன் மாணவர்களின் எதிர் கால நலன் கருதி வாபஸ் பெறும் படி உத்தரப்பிரதேச அரசை கேட்டுகொண்டார்.

இதனையடுத்து உத்தரப்பிரதேச அரசு வழக்கை வாபஸ் பெற்றாதாக அறிவித்துள்ளது.