மியான்மரில் நாடாளுமன்றம் முன் நடனமாடிய பெண்!!

579

மியான்மரில்..

மியான்மரில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றம் முன் நடனமாடிய பெண் ஒருவர் தொடர்பிலான காணொளி சமூக ஊடகங்கள் வைரலாகியுள்ளது.

மியான்மரில் நடைபெற்ற இடம்பெற்ற பொதுத்தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து ஆங் சான் சூகி உள்ளிட்ட ஆளும் கட்சியின் முக்கிய தலைவர்களை இராணுவம் கைது செய்துள்ளது.

அத்துடன், ஒரு வருடத்திற்கு அவசர நிலையும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக மியான்மர் இராணுவம் அறிவித்துள்ளது.

இவ்வாறான நிலையிலேயே கிங் ஹின் வாய் என்ற பெண் அந்நாட்டு நாடாளுமன்ற கட்டிடம் முன் நடனம் ஆடி, அதனை காணொளியாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

மியான்மரில், ஆட்சியை கைப்பற்றிய இராணுவத்தினர் நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றனர். இது குறித்து எதுவும் அறியாத கிங் ஹின் வை என்ற நடனக்கலைஞர் நடனப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த காணொளி சமூக ஊடகங்கள் வைரலாகியுள்ளது. குறித்த பெண்ணின் இந்த நடவடிக்கைகளுக்கும், இராணுவ கையகப்படுத்துதலுக்கும் இடையிலான அதிசயமான வேறுபாடு குறித்து பலர் கருத்து தெரிவித்தனர்.