உயிருடன் இருக்கும்போதே சமாதிக்கு அடிக்கல் நாட்டிய வினோத விவசாயி!!

875

Famer

திருநெல்வேலி மாவட்டத்தில் உயிருடன் இருக்கும்போதே சமாதிக்கு அடிக்கல் நாட்டிய வினோத சம்பவம் நடைபெற்றுள்ளது.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள ராமகிருஷ்ணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தவசிக்கனி (54), விவசாயி. இவரது மனைவி பாக்கியத்தாய். இவர்களது மகன் ஜெயராகவன் (32).

தவசிக்கனியுடன் ஏற்பட்ட தகராறால் மனைவி, மகன் 2 பேரும் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டனர். இதனால் தவசிக்கனி தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் தனக்கு சமாதி கட்ட முடிவு செய்த அவர் அதற்காக அழைப்பிதழும் அச்சடித்தார். அதில், 6ம் திகதி சமாதிக்கு அடிக்கல் நாட்டு விழா, மற்றும் ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என குறிப்பிட்டு உறவினர்களுக்கு வழங்கியுள்ளார்.

அதன்படி நேற்று காலை 10 மணிக்கு அகலிகை சாஸ்தா கோவில் ரோட்டில் உள்ள தவசிக்கனிக்கு சொந்தமான தோட்டத்தில் சமாதிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. நிகழ்ச்சிகள் முடிந்ததும் வந்திருந்த அனைவருக்கும் இனிப்பு, இலவச அரிசி, வேட்டி, சேலை மற்றும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. உச்சகட்டமாக மது விருந்துடன், சாப்பாடும் வழங்கினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு மனைவி, மகன் இருந்தும் தற்போது அவர்கள் ஆதரவு இல்லை. நான் இறந்து விட்டால் என்ன செய்வார்கள் என்பது தெரியாது.

எனவே நான் உயிருடன் இருக்கும் போதே எனக்கு சமாதி கட்ட முடிவு செய்தேன் என்றும் எனது தாய், தந்தை அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தின் அருகே எனக்கு சமாதி கட்ட எனது பிறந்த நாளான நேற்று முன்தினம் (6ம் திகதி )அடிக்கல் நாட்டியுள்ளேன் எனவும் கூறியுள்ளார்.