வவுனியாவில் நீதிக்கான கவனயீர்ப்பு பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!!

2402


போராட்டம்..



வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிக்கான கவனயீர்ப்பு பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்னி மக்கள் அமைப்பு, வவுனியா மாவட்ட மக்கள் காப்பகம் ஆகியவற்றினால் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.



குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா பழைய பேரூந்து நிலைய முன்றலில் இன்று (06.02.2021) காலை 9.30 மணி தொடக்கம் 10.00 மணி வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.




போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாணக்கியனே நீ நேற்று அரச விருந்தில் இன்றோ பி2பி இல் எமாற்றாதே தமிழினத்தை , ஏசி அறையில் உல்லாசமாய் இருப்பவரே இளைஞர்களின் இரத்தத்தை வசனங்களால் சூடாக்காதே இழந்தது போதும்,


சாணக்கியன் புலிக்கு பயந்தவன் நடைப்பயணத்தில் கோடிகளை வாங்கியவன் கூட்டமைப்பில், வவுனியாவில் கடைகளை திறக்க பி.சி.ஆர் தேவை வெளிமாவட்டத்திலிருந்து ஊர்வலம் நடத்தியவர்களுக்கு பி.சி.ஆர் தேவையில்லையா?,

யுத்தம் முடிந்த பின்பும் பித்தாலட்டம் எதற்கு, இல்லாமல் போன எங்கள் உறவுகளுக்காக இருக்கின்றவர்களை சாகடிக்காதே வாழ வழி செய் போன்ற பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாதைகளை எந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


குறித்த போராட்டத்தில் 10க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதுடன் போராட்டத்திற்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.