வவுனியாவில் கொரோனா தொற்றால் உயிர்நீத்த வைத்தியருக்கு அஞ்சலி!!

1884


வைத்தியருக்கு அஞ்சலி..


கொரோனா தொற்றினால் உயிரிழந்த இலங்கையின் முதலாவது வைத்தியரான கயான் டந்தநாராயணவிற்கு வவுனியா மக்களினால் அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த அஞ்சலி நிகழ்வு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இன்று (07.02.2021) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற போராடி தனது உயிரினையும் துறந்த ராகம வைத்தியசாலை வைத்தியர் கயான் டந்தநாராயணவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அஞ்சலி உரைகளும் இடம்பெற்றதன.


குறித்த அஞ்சலி நிகழ்வில் அரச அதிபர் சமன் பந்துலசேன, நகரசபை உறுப்பினர்கள், வைத்தியர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.