9 வயது சிறுமியை கத்தி முனையில் பலாத்காரம் செய்த கொடூரன் கைது!!

571

Abbநான்காம் வகுப்பில் படிக்கும் 9 வயது சிறுமியை கத்தி முனையில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியவனை டெல்லி பொலிசார் கைது செய்துள்ளனர்.

புது டெல்லியின் அசோக் நகர் பகுதியில் உள்ள வீட்டின் வாசலில் நேற்று மதியம் அந்த சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் உமேஷ்(30) என்பவன் சொக்லேட் தருவதாக ஆசை காட்டி தனது அறைக்கு அழைத்து சென்றான்.

அறையின் கதவை சாத்தி விட்டு கத்தியை காட்டி மிரட்டி அவளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அந்த காமுகன், நடந்ததை வெளியே சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளான்.

அவனிடம் இருந்து விடுபட்டு வந்த சிறுமி நடந்த கொடுமையை பெற்றோரிடம் கூறி கதறி அழுதாள்.

அவர்கள் அளித்த புகாரின் பேரில் சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிசார் உமேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.