கனடா பிரதமரிடம் தோற்றுப் போன ஒபாமா!!

322

Obamaகனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரிடம் பந்தயம் கட்டி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தோற்றுப் போயுள்ளார்.

ரஷ்யாவில் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற சோச்சி குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஐஸ் ஹொக்கி போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடாவின் ஆண்கள் குழுவினர் மோதியது.

இதில் அமெரிக்க அணி தான் வெற்றி பெறும் என ஜனாதிபதி ஒபாமா, கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரிடம் பந்தயம் கட்டினார்.
பந்தயத்தில் தோற்கும் பட்சத்தில், தங்களது நாட்டில் தயாராகும் உயர்ரக பியர் பாட்டில்களை வழங்க வேண்டும் என கூறப்பட்டது.

இந்நிலையில் 1–0 என்ற கோல் கணக்கில் கனடா அமெரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதற்கிடையே கனடா பிரதமர் வானொலி நிகழ்ச்சி ஒன்றில், தனக்கு இன்னும் வந்து சேர வேண்டிய பியர் பாட்டிகள் வரவில்லை என நகையாடியது ஒபாமாவின் செவிகளுக்கு எட்டியது.

இதனையடுத்து வெள்ளை மாளிகையில் இருந்து 2 பெட்டி ‘பியர் பார்சல்களை வாஷிங்டனில் உள்ள கனடா தூதரகத்துக்கு அனுப்பி வைத்ததுடன், கனடா வீரர்களுக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வான்கூவர் நகரில் நடந்த ஹொக்கி போட்டியின்போதும் கனடா அணியிடம் பந்தயம் கட்டி தோற்றுப் போன ஒபாமா பியர் பாட்டில்களை அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.