கொரோனா தொற்றால் மேலும் 10 மரணங்கள் பதிவு!!

674

கொரோனா..

கோவிட் தொற்றுக்கு இலக்கான மேலும் 10 பேர் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரச தகவல் திணைக்களம் குறித்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்படி, நாட்டில் கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 445 ஆக அதிகரித்துள்ளது.

1. கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதான ஆண் ஒருவர், ஹோமாகம வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கோவிட் நிமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.

2. வெள்ளவத்தை பிரதேச்தைச் சேர்ந்த 82 வயதான பெண் ஒருவர் ஹோமாகம வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கோவிட் நிமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.

3. களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதான பெண் ஒருவர் கடந்த 16ம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். கோவிட் நோய்த் தொற்று, இரத்தம் விசமாகியமை மற்றும் நீரிழிவு நோய்களினால் இவர் உயிரிழந்துள்ளார்.

4. வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான பெண் ஒருவர் கடந்த 16ம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். கோவிட் நோய்த் தொற்று, இரத்தம் விசமாகியமை மற்றும் இரத்த அழுத்தம் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.

5. பிபில பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதான ஆண் ஒருவர் கண்டி வைத்தியசாலையில் கடந்த 19ம் திகதி உயிரிழந்துள்ளார். மூளைக்கு இரத்தம் கசிந்தமை, கோவிட் நோய்த் தொற்று மற்றும் சுவாசப் பிரச்சினையினால் இவர் உயிரிழந்துள்ளார்.

6. குருதலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதான ஆண் ஒருவர், முல்லேரியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கோவிட் நிமோனியா, இருதய நோய் மற்றும் சிறுநீரக நோய் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.

7. புறக்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதான ஆண் ஒருவர் தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் கடந்த 19ம் திகதி உயிரிழந்துள்ளார். நீரிழிவு மற்றும் கோவிட் நிமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.

8. குடாகல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதான ஆண் ஒருவர் கருணாகல் போதானா வைத்தியசாலையில் கடந்த 14ம் திகதி உயிரிழந்துள்ளார். சிறுநீரக நோய், இரத்தம் விசமாகியமை மற்றும் கோவிட் நிமோனியாவினால் இவர் உயிரிழந்துள்ளார்.

9. ரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 90 வயதான ஆண் ஒருவர் பிம்புர வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கோவிட் நிமோனியாவினால் இவர் உயிரிழந்துள்ளார்.

10. ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர் தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கோவிட்-19 நோய்த் தொற்று, நீரிழிவு, உயர் குருதியழுத்தம் என்பனவற்றினால் இவர் உயிரிழந்துள்ளார்.

சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய இந்த விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.