239 பேருடன் காணாமல்போன விமானத்தின் பாகங்கள் வியட்னாம் கடலில்!!

341

Flight

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீன தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டு மாயமான விமானத்தின் பாகங்கள் என சசந்தேகிக்கப்படும் பொருட்கள் மலேசியா மற்றும் வியட்னாம் கடற் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

மலேசிய அரசுக்கு சொந்தமான போயிங் 777-200 ரக விமானம் நேற்று காணாமற் போன நிலையில், அது தன் திசையை மாற்றிக் கொண்டு மீண்டும் கோலாலம்பூர் நோக்கி பயணித்தருக்கக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக மலேசிய விமானப்படை அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டிருந்தனர்.

எனினும் குறித்த விமானத்தின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் கதவு உள்ளிட்ட பொருட்கள் மலேசியா மற்றும் வியட்னாம் கடற் பகுதியில் இனங்காணப்பட்டுள்ளன.

அந்த விமானத்தில் 2 குழந்தைகள் உள்பட 227 பயணிகள், 12 பணியாளர்கள் என மொத்தம் 239 பேர் இருந்ததாக மலேசியன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த விமானத்தில் பயணித்தவர்களில் சீன நாட்டைச் சேர்ந்த 152 பேரும் மலேசியாவைச் சேர்ந்த 38 பேரும் இந்தோனேசியாவைச் சேர்ந்த 38 பேரும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நால்வரும் பிரான்ஸைச் சேர்ந்த மூவரும் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த விமானம் வியட்னாமின் பூ குவாக் தீவிலிருந்து 153 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக வியட்னாம் கடற்படை அதிகாரிகள் நேற்று பிற்பகல் அறிவித்திருந்தனர்.