குழந்தையின் மூளையில் முளைத்த பல்!!

578

Teeth

நான்கு மாத குழந்தையின் மூளையில் பல் முளைத்த கட்டியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள மருத்துவ மையத்தில் சில தினங்களுக்கு முன், பெரிய தலையுடன் கூடிய நான்கு மாத பச்சிளம் குழந்தை அனுமதிக்கப்பட்டது.

உடனடியாக குழந்தையின் தலையை ஸ்கேன் செய்து பார்த்த போது, பிட்யூட்டரி சுரப்பிக்கு அருகே கோல்ப் பந்து அளவிலான கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கட்டியில் இருந்த திசுக்களை எடுத்து பரிசோதனை செய்து பார்த்த போது, மிகவும் அரிதான அதேசமயம் மெதுவாக வளரும் மூளைக்கட்டி என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து குழந்தையின் மூளையில் இருந்த கட்டி அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. இந்தக் கட்டியில் பல் முளைத்திருந்தது மிகவும் அபூர்வமானது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.