காதலை நிராகரித்ததால் முகத்தை இழந்த பெண்ணை மீண்டும் தேடி வந்த காதல் : நெகிழவைக்கும் ஒரு சம்பவம்!!

13837

பிரமோதினி..

ஒரு சிறுமியாக இருக்கும்போது காதலை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் அந்த சி.றுமியின் மு.கத்தில் அ.மிலத்தை வீசிச்சென்றார் ஒரு இளைஞர்.

இந்தியாவின் ஒடிஷாவில் வாழும் பிரமோதினி என்ற அந்த சி.றுமியின் முகம் சி.தைந்துபோனதோடு, அவரது பார்வையும் பறிபோய்விட, இருளிலேயே வாழ்ந்துவந்தார் அவர்.

13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பிரமோதினியைத் தேடி காதல் வந்தபோது, அவர் அதை நிராகரிக்கவில்லை. பிரமோதினி (28) சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய ஒருவரின் நண்பர் சரோஜ் சாஹூ (29).

அவர் தன் நண்பருடன் மருத்துவமனைக்கு வந்தபோது பிரமோதினியை சந்தித்திருக்கிறார். பிரமோதினியை கவனித்துக்கொள்வதற்காக தனது வேலையையே விட்டிருக்கிறார் சாஹூ.

இருவருக்குமான பழக்கம் காதலாக மாற, இருவர் குடும்ப சம்மதத்துடன் இம்மாதம் 1ஆம் திகதி இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளார்கள். அவர்களது திருமணத்தில், ஆ.சி.ட் வீ.ச்சினால் பா.திக்கப்பட்டு மீண்டு வாழும் ஆறு பேர் உட்பட, 1,000 விருந்தினர்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.

தனக்கு ஒரு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பார்வை வந்தபோதுதான் தான் முதன் முதலாக சாஹூவைப் பார்த்ததாக தெரிவிக்கிறார் பிரமோதினி.

நான் இருக்கும் வண்ணமாகவே அவர் என்னை நேசிக்கிறார் என்று கூறும் பிரமோதினி, மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று அவர் எப்போதும் சொல்வதுண்டு என்கிறார். கணவனும் மனைவியுமாக, ஆ.சி.ட் வீ.ச்சால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வு மையம் ஒன்றில் பணியாற்றிவருகிறார்கள்.