ரயிலும் லொறியும் மோதியதில் ஒருவர் பலி – பலர் காயம்..!

640

அங்குலான பகுதியில் இன்று மாலை ரயில் ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதாக ரயில்வே கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து களுத்துறை நோக்கி சென்ற ரயிலுடன் லொறி ஒன்று மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானதுடன் பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.