மலேசிய விமானத்தை தேடும் 10 செயற்கைக் கோள்கள்!!

647

Satellites

கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நோக்கி 239 பயணிகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 3 நாட்களாக தேடியும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த தேடுதல் பணியில் 10 நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுக்கள் ஈடுபட்டிருந்தனர். மேலும் 40 கப்பல்கள் மற்றும் 30 விமானங்களும் இதில் ஈடுபடுத்தப்பட்டன.

இந்நிலையில் சீனாவின் ஜியான் செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு மையம், காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்க 10 உயர்திறன் செயற்கைக்கோள்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

இதன்மூலம், விபத்து நடந்திருப்பதாக சந்தேகிக்கப்படும் கடற்பகுதியில் செயற்கைக்கோள்களின் வானிலை கண்காணிப்பு மற்றும் தகவல்தொடர்பு கட்டளைகளை பெற்று தேடுதலை துரிதப்படுத்த முடியும்.