கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!!

427


பண்டிகை காலத்திற்குப் பின்னர் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கும் என அகில இலங்கை கோழி வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


அந்த சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர இதனை தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து வர்த்தக அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், “ஒப்புக்கொண்டதன்படி, மக்காச்சோளம் உத்தரவாத விலையில் வழங்கப்பட்டால் விலை அதிகரிப்பு இருக்காது” என்றும் கூறினார்.வர்த்தமானி அறிவிப்பின்படி கோழி இறைச்சியின் விலைகள் பேணப்பட்டு வருவதாகவும், தோல் கொண்ட கோழி இறைச்சி 430 ரூபாவிற்கும், தோல் இல்லாத கோழி இறைச்சி 500 ருபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

எவ்வாறாயினும், எதிர்காலத்தில் கோழி இறைச்சியின் பற்றாக்குறை ஏற்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஏனெனில் மக்காச்சோளம் பற்றாக்குறை நிலவுகின்றது. அதன் விலையும் அதிகரித்து செல்கின்றது.


இந்நிலையில், கோழி இறைச்சியின் நிலையான விலையை பராமரிக்க, கோழிப்பண்ணையாளர்களுக்கு மக்காச்சோளத்தை 60 ரூபாவிற்கு வழங்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.