வெளிநாடுகளில் பணியாற்றிய 122 இலங்கையர்கள் கொரோனா தொற்றினால் மரணம்!!

764


கொரோனா..


வெளிநாடுகளில் பணியாற்றி வந்த 122 இலங்கையர்கள் கோவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.வெளிநாடுகளில் பணியாற்றி வரும் 4431 இலங்கையர்களுக்கு இதுவரையில் கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது எனவும், இதில் 4071 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


கோவிட் வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக 14 நாடுகளில் பணியாற்றி வந்த 30831 இலங்கையர்கள் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.


நாடு திரும்ப விரும்பும் அனைத்து வெளிநாடுகளில் பணியாற்றி வரும் இலங்கையர்களுக்கும் அதற்கான வசதிகளை செய்து கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.