வவுனியாவில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது!!

2649


மூவர் கைது..


வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிசாரால் இன்று(07.04.2021) கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,



வவுனியாவில் கடந்த சில தினங்களாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்திருந்தன. அந்த வகையில் கடந்த 30 ஆம் திகதி வவுனியா, இலங்கை வங்கி விடுதியில் புகுந்த திருடர்கள் அங்கிருந்த தொலைகாட்சி பெட்டி மற்றும் துவிச்சக்கர வண்டி என்பவற்றை திருடிச் சென்றிருந்தனர்.


அத்துடன், கடந்த முதலாம் திகதி தேக்கவத்தையில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த திருடர்கள் அங்கிருந்த தொலைகாட்சி பெட்டியையும், 8 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருடிச் சென்றிருந்தனர்.


மேலும், நேற்றைய தினம் (06.04) வவுனியா, குட்செட் வீதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த திருடர்கள் அங்கிருந்த டிவிடி பிளேயர் மற்றும் முக்கால் பவுண் தோடு என்பவற்றை திருடிச் சென்றிருந்தனர். குறித்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானாவடு வழிகாட்டலில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் ஜயவர்த்தன தலைமையில் பொலிஸ் சார்ஜன்டுகளான திசாநாயக்கா (37348), ரஞ்சித் (14651),

டிலீபன்(614661), பொலிஸ் கான்ஸ்டபிள்களான அமரசூரிய (9423), பியங்கர்(47358), உபாலி (60954), விஜயசிங்க (74451), சமீர (75038), தயாளன் (91792), நிமலன் (91755), தம்மிக்க (93786), அஜத் (95766), மதுசானி (9928) ஆகிய பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது குறித்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் மதவுவைத்தகுளம், கற்குழி, தேக்கவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 39, 28, 24 வயதுடைய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார விசாரணைகளின் பின் மூவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.