ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளை விடுவிக்க வேண்டாம் என வலியுறுத்தல்!!

396


Rajeevராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் 21.5.1991 அன்று வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். அவருடன் பொலிஸ் அதிகாரிகள் உள்பட 15 பேர் பலியாகினர்.



படுகொலை செய்யப்பட்ட 15 பேர் குடும்பத்தை சேர்ந்தவர்கள், தமிழக காங்கிரஸ் மாநில செயலாளர்கள் எம்.எஸ்.திரவியம், கவிஞர் ஜோதிராமலிங்கம் ஆகியோர் தலைமையில் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, துணை தலைவர் ராகுல்காந்தியை சந்தித்தனர்.

அப்போது அவர்கள், சோனியாகாந்தியிடமும், ராகுல்காந்தியிடமும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கூடாது என்று வலியுறுத்தினர்.