இலங்கையில் வாகன விபத்துக்களில் ஒரே நாளில் 16 பேர் பலி!!

1700

விபத்துக்கள்..

நாடு முழுவதும் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் இதுவரையான காலப்பகுதியில் வாகன விபத்துக்களால், அதிகளவானோர் நேற்றைய தினமே உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விபத்துக்களில் இருவர் மாத்திரம் காயமடைந்துள்ளனர். உயிரிழந்த 16 பேரில் 12 பேர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர்கள் எனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.