5000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்கப் பெறாதவர்களுக்கான விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்!!

2639

5000 ரூபாய் கொடுப்பனவு..

5000 கொடுப்பனவு இதுவரை வழங்கப்படாதவர்களுக்கு நாளை திங்கட்கிழமை முதல் குறித்த கொடுப்பனவு வழங்கப்படும் என்று சமூர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்தார்.

மேலும் எதிர்வரும் வாரத்தின் முதல் சில நாட்களில் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்கி நிறைவு செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு அவர் கூறுகையில்,“தற்போது, ​​இலங்கையில் ஆயிரத்து 73 சமுர்தி வங்கிகளில் ரூ .5000என்ற சமூக பாதுகாப்பு நல உதவித்தொகையை அரசாங்கம் வழங்கி வருகிறது. தற்போதைய நிலையில் 23 இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் திங்கள் கிழமைக்கு அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்குள் அனைவருக்கும் இந்த கொடுப்பனவை வழங்கி நிறைவு செய்ய எதிர்ப்பார்த்துள்ளோம்.

மேலும் இதற்கு தேவையான நிதியை சமுர்தி வங்கிகளுக்கு அனுப்பியுள்ளோம். இல்லையென்றால் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை எங்களிடம் சமர்ப்பித்து தேவையான நிதிகளை அந்தந்த பகுதிகளுக்கு பெற்றுக் கொள்ளுமாறு நாம் கோரியுள்ளோம்.