வவுனியா நகரிலுள்ள நீர்த்தாங்கி மீது மது போதையில் ஏறி நின்று சத்தமிட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் மாங்குளம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் வவுனியா நகருக்கு வந்து மதுவருந்திய பின்னர் போதையில் நீர்த்தாங்கி மீதேறி சத்தமிட்டுக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஒரு நபர் நீர்த்தாங்கி மீதேறி சத்தமிட்டுக் கொண்டிருந்ததாக வவுனியா பொலிஸ் பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலின்படி பொலிஸார் அந்த இடத்துக்கு விரைந்து மிகச் சிரமத்துடன் அந்த நபரை கீழே இறக்கி விசாரணை செய்த போது அவர் பொலிஸ் கான்ஸ்டபிள் என்பது தெரிய வந்துள்ளது.