இலங்கையின் பல பகுதிகளில் அபாய நிலை : பொது முடக்கம் தொடர்பில் தீவிரமாக ஆராயும் அரசாங்கம்!!

1718

பொது முடக்கம் தொடர்பில்…

நாட்டில் கோவிட் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து நாட்டின் பல பகுதிகள் அதிக அபாயமிக்கவையாக மாறி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்படுகின்ற நிலையில் பொது முடக்கம் ஒன்றுக்குச் செல்வது குறித்தும் அரசாங்கம் கடந்த இரு நாட்களாக தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அறிய முடிகிறது.

புத்தாண்டுக்கு முன்னர் நாட்டில் கோவிட் தொற்றுப் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், புத்தாண்டு காலப்பகுதியில் மக்களின் செயற்பாடுகளைத் தொடரந்து நாட்டில் மீண்மொரு கோவிட் அலை ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளது.

இதன் விளைவாக நாட்டில் முதலாம் மற்றும் இரண்டாம் அலைகளின் போது அடையாளம் காணப்ட்ட கோவிட் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கையை விட புத்தாண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

-தமிழ்வின்-