கொரோனா தொற்று ஏற்பட்டால் மரணம் ஏற்படுமா? ஒருதடவை படித்துப் பாருங்கள்!!

2236

உலகளாவிய ரீதியில் கோரத் தாண்டவம் ஆடி வரும் கோவிட் தொற்று விலை மதிக்க முடியாத லட்சக்கணக்கான உயிர்களை தினமும் காவு கொண்டு வருகின்றது.

பல வல்லரசு நாடுகளே இந்த இக்கட்டான நிலையில் இருந்து மீண்டு வர திணறிக் கொண்டிருக்கும் நிலையில் பல வறிய நாடுகளின் நிலை பதற வைக்கிறது.

தீவிரம் அடையும் தொற்றுக்கள், வறுமை, பட்டிணி, வேலையின்மை என முழு உலகும் அல்லாடிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் கோவிட் வைரஸ் என்றால் என்ன? இந்த வைரஸ் எப்படி ஒருவருக்கு பரவுகிறது? இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியுமா போன்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கின்றது இந்த கட்டுரை.

கோவிட் வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்ன?
புதிதாக, தொடர்ச்சியான இருமல். ஒரு மணி நேரத்துக்கும் மேல் அந்த இருமல் தொடரும் அல்லது 24 மணி நேரத்துக்குள் மூன்று அல்லது நான்கு முறை தொடர் இருமல் வரும்.

காய்ச்சல். உங்கள் உடல் வெப்பம் 37.8 டிகிரி செல்ஸியசைவிட அதிகமாகும். வாசனை அல்லது சுவையை உணர முடியாமல் போகலாம்.

கோவிட் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் நபர்களில் குறைந்தது 85% பேருக்கு மேற்கண்ட மூன்று அறிகுறிகளில் ஒன்று தென்படும் என்று இங்கிலாந்து பொது சுகாதாரத் துறை தெரிவிக்கிறது.

உங்களுக்கு உங்கள் அருகில் இருக்கும் ஒருவருக்கோ இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், வீட்டிலேயே இருப்பது, கோவிட் வைரஸ் தொற்று பிறருக்கு வராமல் தடுக்க உதவும்.

இந்த கோவிட்-19 முதன்முதலில் காய்ச்சலாக தொடங்கும். பின் வறட்டு இருமல் அதன்பின் ஒரு வாரம் கழித்து சுவாசக் கோளாறுகள் ஏற்படும். ஆனால் இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் அனைவரும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அர்த்தமில்லை.

இந்த அறிகுறிகள் பிற பொதுவான வைரஸாலும் ஏற்படக்கூடியவை. கோவிட்-19 அறிகுறிகள் தென்படி, ஒருவரின் உடலில் தொற்று உண்டான நேரத்தில் இருந்து சராசரியாக ஐந்து நாட்கள் ஆகும். எனினும் 14 நாட்கள் வரை கூட ஆகலாம் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

எல்லோருக்கும் அறிகுறிகள் ஒன்று போல இருக்குமா?
இல்லை. அறிகுறிகள் ஒருவருக்கொருவர் மாறுபடும். இதற்கு காரணம் வெவ்வேறு நபர்களின் உடல்களில் வெவ்வேறு பாகங்களை கோவிட் வைரஸ் தாக்கும் என்பதுதான்.

காய்ச்சல் இல்லாத இன்ஃபுளுவென்சா: தலைவலி, நுகரும் உணர்வு இல்லாமல் போதல், தசை வலி, சளி, தொண்டை எரிச்சல், நெஞ்சு வலி.

காய்ச்சலுடன் கூடிய இல்லாத இன்ஃபுளுவென்சா: தலைவலி, நுகரும் உணர்வு இல்லாமல் போதல், தசை வலி, சளி, தொண்டை எரிச்சல், பசியின்மை, தொண்டை அடைப்பு அல்லது பேச்சு தடைபடுவது போன்ற உணர்வு.

ஜீரண மண்டலத்தில் அறிகுறிகள்: தலைவலி, நுகரும் உணர்வு இல்லாமல் போதல், காய்ச்சல், சளி, தொண்டை எரிச்சல், பசியின்மை, நெஞ்சு வலி, வயிற்று போக்கு.

உடல் சோர்வு (முதல் நிலை தீவிரத் தன்மை): தலைவலி, நுகரும் உணர்வு இல்லாமல் போதல், காய்ச்சல், சளி, தொண்டை எரிச்சல், பசியின்மை, நெஞ்சு வலி, வயிற்று போக்கு, தசை வலி, தொண்டை அடைப்பு அல்லது பேச்சு தடைபடுவது போன்ற உணர்வு, உடல் சோர்வு.

குழப்பநிலை (இரண்டாம் நிலை தீவிரத் தன்மை): தலைவலி, நுகரும் உணர்வு இல்லாமல் போதல், காய்ச்சல், சளி, தொண்டை எரிச்சல், நெஞ்சு வலி, வயிற்று போக்கு, தசை வலி, தொண்டை அடைப்பு அல்லது பேச்சு தடைபடுவது போன்ற உணர்வு, உடல் சோர்வு, தெளிவாக சிந்திக்க இயலாமல் போகும் மனநிலை.

வயிறு மற்றும் சுவாசக் கோளாறு (அதீத தீவிரத் தன்மை): தலைவலி, நுகரும் உணர்வு இல்லாமல் போதல், காய்ச்சல், சளி, தொண்டை எரிச்சல், பசியின்மை, நெஞ்சு வலி, வயிற்று வலி, வயிற்று போக்கு, தசை வலி, தொண்டை அடைப்பு அல்லது பேச்சு தடைபடுவது போன்ற உணர்வு, உடல் சோர்வு, மூச்சு விடுவதில் சிரமம்.

இந்த கோவிட் 19 தீவிரமாக இருந்தால், நிமோனியா, சிறுநீரக பழுது, தீவிர சுவாசப் பிரச்சனை, தீவிர நிலையில் உயிரிழப்பும் ஏற்படலாம்.

பொதுவாக இந்த அறிகுறிகள் சராசரியாக ஐந்து நாட்களில் தெரியலாம என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் சிலருக்கு அதைக்காட்டிலும் தாமதம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

சிலருக்கு உடல் நலக்குறைவு இருப்பது தென் படுவதற்கு முன்னரே அவர் தொற்றை பரவலாம் என்றும் கூறப்படுகிறது.

குழந்தைகளுக்கு கோவிட் வந்தால் என்ன அறிகுறி?
வாந்தி, வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பகுதியில் தசை பிடிப்பு ஆகியவை குழந்தைகளுக்கு கோவிட் வைரஸ் தொற்று வந்ததற்கான அறிகுறி என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

இருமல் வந்தால் கோவிட்-19 அறிகுறியா?
பல வைரஸ் தொற்றுகளுக்கும் கோவிட்-19 தொற்று போன்றே அறிகுறிகள் இருக்கும். குறிப்பாக இந்த அறிகுறிகள் குளிர் காலத்தில் பரவலாக இருக்கும்.

கோவிட் வைரஸ் தொற்றின் மூன்று முக்கிய அறிகுறிகளில் ஏதாவது ஒன்று இருக்கும், பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 இருப்பதற்கான வாய்ப்பு இருக்கும். அவர்கள் வேறு வைரஸ் தொற்றுகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

ஆனாலும், பரிசோதனை செய்து அதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.

எப்போது மருத்துவமனைக்கு செல்லவேண்டும்?
கோவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள், போதிய ஒய்வு மற்றும் பாராசெட்டமால் போன்ற வலி நிவாரணிகளை எடுத்துக் கொண்டாலே குணமாகிவிடுவர்.

ஆனால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்வதற்கு முக்கிய காரணம் சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படுவதால்தான்.

பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரலை பரிசோதிக்கும் மருத்துவர்கள், அது அந்தளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து, பிராணவாயு சிகிச்சை அல்லது வெண்டிலேட்டர் சிகிச்சை எடுத்துக்கொள்ள பரிந்துரைப்பார்.

தீவிர சிகிச்சை பிரிவில் என்ன நடக்கும்?
மிகவும் கடுமையாக உடல்நலன் பாதிக்கப்படுபவர்கள் அனுமதிக்கப்படும் மருத்துவமனை பிரிவே தீவிர சிகிச்சை பிரிவு.

கோவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிராணவாயு சிகிச்சை அளிக்கப்படும். மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு செலுத்தப்படும் பிராணவாயுவின் அளவு மற்றவர்களுக்கு வழங்கப்படுவதில் இருந்து முற்றிலும் மாறுபடும்.

கடுமையான பாதிப்பை சந்திந்தவர்களுக்கு வென்டிலேட்டர்கள் மூலம் அவர்களின் சுவாசப் பிரச்சனை சரிசெய்ய துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கோவிட் அறிகுறி தெரிந்தால் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் கோவிட் தொற்று பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பயணம் செய்திருந்தாலோ அல்லது பயணம் செய்தவருடன் தொடர்பில் இருந்தாலோ, விட்டிலேயே இருங்கள்.

குறிப்பாக உங்களுக்கு லேசாக ஏதேனும் அறிகுறி இருந்தாலோ அது சரியாகும் வரை பிறருடன் தொடர்பில் இருப்பதை தவிர்த்து விடுங்கள். முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள்.

கோவிடட்டிலிருந்து நான் என்னை தற்காத்து கொள்வது எப்படி?
உங்கள் கைகளை குறைந்தது 20 நொடிகள் கழுவ வேண்டும். உங்கள் கைகளின் அனைத்து பாகங்களுக்கும் கவனம் கொடுங்கள். சோப்பு மற்றும் நீரைக் கொண்டு நன்றாக கழுவுங்கள்.

உங்கள் கண்கள், மூக்குகள், மற்றும் வாயை தொடுவதை தவிருங்கள் எனவே அந்த வழியில்தான் வைரஸ் உங்கள் உடம்பில் பரவும். நீங்கள் இருமினாலோ அல்லது தும்மினாலோ டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்துங்கள்.

அதை மறக்காமல் குப்பையில் போட்டு கை கழுவுங்கள். கைக்குட்டைகளை காட்டிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் டிஷ்யூக்களை பயன்படுத்துங்கள். டிஷ்யூ பேப்பர் இல்லை என்றால் உங்கள் முழங்கை மூட்டை பயன்படுத்தி இருமுங்கள்.

கைப்பிடிகள், லிஃப்ட் பொத்தான்கள், போன்ற அதிகம் பேர் தொடும் பொத்தான்களை தொடுவதை தவிருங்கள். காய்ச்சல், இருமல், சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் இருப்பவர்களிடமிருந்து தள்ளி இருங்கள்.

உங்களுக்கு காய்ச்சல், இருமல், சுவாசப் பிரச்சனைகள் இருந்தால் எங்கும் போகாமல் வீட்டிலேயே இருங்கள்.

கோவிட்-19 என்றால் என்ன?
கோவிட் வைரஸ்கள் ஒரு பெரிய குடும்பத்தை சேர்ந்தவை. அது மனிதர்கள் மற்றும் விலங்குகள் மத்தியில் பல நோய்களை உருவாக்கும்.

மனிதர்களில் இந்த கோவிட் வைரஸ் சளி முதல் சார்ஸ் வரையில் உண்டாக்கக்கூடியவை. தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த தொற்றுக்கு கோவிட்-19 என பெயரிட்டுள்ளனர்.

இந்த தொற்று சமீபமாக கண்டுபிடிக்கப்பட்ட கோவிட் வைரஸால் ஏற்படுகிறது. இது விஞ்ஞானிகளால், சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம் கோவிட் வைரஸ் 2 அல்லது Sars-CoV-2 என்று பெயரிடப்பட்டுள்ளது.

கோவிட் ஏற்பட்டால் இறப்பு நிச்சயமா?
கோவிட் தொற்று குறித்த அச்சம் பரவலாக இருந்தாலும், இதனால் இறப்பு ஏற்படும் விகிதம் மிகவும் குறைவே. ஒரு சதவீதத்திலிருந்து 2 சதவீதம் வரையே இறப்பு விகிதம் என கூறப்படுகிறது.

ஆனால் அதை உறுதியாக கூற முடியவில்லை. 56,000 நோயாளிகளிடம் உலக சுகாதார நிறுவனம் சோதனை செய்தது; அதில் கண்டறிந்தவை:

6% பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது என்றும் அவர்களுக்கு – நுரையீரல் பழுது, செப்டிக் ஷாக் (தொற்றிலிருந்து நம்மைக் காக்க நோய் எதிர்ப்பு சக்தி ரத்தத்தில் வெளியிடும் ரசாயனம் தவறாக நமக்கு ஆபத்தை உருவாக்கும் நிலை), உறுப்புகள் செயலிழப்பு மற்றும் இறப்பு ஏற்படும் ஆபத்து ஆகியவை தென்படுகிறது.

14% பேருக்கு தீவிர அறிகுறிகள் காணப்படுகின்றன. – சுவாப்பதில் சிரமம் மற்றும் நுரையீரலுக்குள் சரியாக காற்று செல்லாமை.

80% பேருக்கு மிதமான அறிகுறிகள் – காய்ச்சல், இருமல் சிலருக்கு நிமோனியாவும் இருக்கலாம்.

வயதானவர்கள், ஆஸ்துமா, நீரிழிவு மற்றும் இதய நோய்கள் உள்ளவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படலாம்.

-தமிழ்வின்-