இலங்கையில் தீவிரமடையும் கொரோனா தொற்று : மருத்துவ நிபுணர்களின் புதிய பரிந்துரை!!

1233


கொரோனா தொற்று..



இலங்கையில் கோவிட் தொற்றின் தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சுகாதார நடைமுறைகளை உரியவாறு பின்பற்றுமாறு தொடர்ச்சியாக நாட்டு மக்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.



இவ்வாறான சந்தர்ப்பத்தில் மருத்துவ நிபுணர்களின் புதிய பரிந்துரை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இரண்டு பேருக்கு இடையிலான தூரம் குறித்த பரிந்துரையை மாற்ற வேண்டுமென இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் பத்ம குணரத்ன தெரிவித்துள்ளார்.




அதாவது மருத்துவ நிபுணர்களின் புதிய பரிந்துரையின் அடிப்படையில், இரண்டு நபர்களிடையே குறைந்தது இரண்டு மீட்டர் தூரத்தை வைத்திருக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.