நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோன தொற்று : பல அதிரடி கட்டுப்பாடுகள் அறிவிப்பு!!

2138

நாட்டினுள் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக பரவி வரும் நிலையில் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் வௌியிடப்பட்டுள்ளது.

புதிய வழிகாட்டுதலின் கீழ், மூன்றாம் நிலை கோவிட் அபாயத்திற்கு பொருந்தும் வகையில் பொது மக்கள் செயற்பாட்டுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, புதிய வழிகாட்டுதல்களுக்கு அமைய பொதுமக்கள் ஒன்று கூடுதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்காக பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்புகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டல்கள் பின்வருமாறு,

*பொது போக்குவரத்தின் போது, ரயில்கள் மற்றும் பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.​

*வாடகை வாகன பயன்பாட்டின் போது முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் வாகனங்களில் ஒரே நேரத்தில் இரண்டு பயணிகளை மட்டுமே கொண்டு செல்ல முடியும்.​

*வேறு வகையான வாடகை வாகனங்களில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மாத்திரமே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.

​*கோவிட் தொற்று அல்லாமல் மரணிப்போரின் இறுதிக்கிரியைகள் 24 மணிநேரத்துக்குள் செய்ய வேண்டும்.​

* இறுதிக்கிரியைகளில் 25 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.

​* பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள், மறு அறிவித்தல் வரையிலும் மூடப்படும்.​

* வெசாக், றமழான் ​பெருநாள்களை வீட்டிலிருந்தே கொண்டாட வேண்டும்.

​* ஹோட்டல்களில் கூட்டங்கள் மற்றும் ஒன்று கூடல்களை நடத்துவதற்கு அனுமதி கிடையாது.

​* அரச ஊழியர்கள், பொதுநிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் வருகைத் தரவேண்டும்.​

* தனியார்துறை ஊழியர்கள் குறைந்தளவானோர் அலுவலகத்துக்கு சமூகமளிக்க வேண்டும்.​

* மாநாடு, கருத்தரங்கு, கூட்டங்கள், பகல்போசன விருந்துபசாரம், மே.21 வரை தடைச்செய்யப்பட்டுள்ளன.

​* அங்காடிகள், மொத்த வர்த்த நிலையங்கள், நிதி நிறுவனங்கள், புடவை கடைகள், சில்லறை கடைகளில், மொத்த நுகர்வோரின் எண்ணிக்கை 25 சதவீதத்துக்குள் மட்டுப்படுத்தவேண்டும்.​

* மத வழிபாட்டு இடங்களில் பொதுமக்கள் ஒன்றுக்கூட முடியாது. கைதிகளை பார்வையிட முடியாது.​

* நீதிமன்றத்தில் முழு கொள்ளளவு 25 சதவீதத்துக்கு இருக்கவேண்டும். மக்கள் வருகை தரமுடியும்.​

* இசைக்கச்சேரி, கரையோர ஒன்றுகூடல்கள், உற்சவங்களுக்கு முழுத்தடை.​

* மே.4 முதல் மே 20 வரை திருமண வைபவங்களுக்கு அனுமதி இல்லை.​ மே.20 ஆம் திகதியன்று நாட்டில் காணப்படும் கோவிட் நிலைமையை கருத்தில்​கொண்டு அது திருத்தப்படும்.

-தமிழ்வின்-