இலங்கையில் இன்று முதல் திருமண நிகழ்வுகளுக்கு தடை!!

674


திருமண நிகழ்வுகளுக்கு தடை..


நாட்டில் பரவி வரும் கோவிட் வைரஸ் நிலைமையை கருத்திற் கொண்டு திருமண நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.திருமண நிகழ்வு உட்பட, மக்கள் ஒன்றுக்கூடும் அனைத்து நிகழ்வுகளையும் தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டில் கோவிட் தொற்றின் பரவல் தீவிரமடைந்துள்ளமையினால் எதிர்வரும் 2 வாரங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.


கோவிட் தொற்று காரணமாக தடை செய்யப்பட்டுள்ள கூட்டங்கள், விருந்துகள், திருமணங்கள் ஆகியவைகளை வீடுகளில் அல்லது வேறு இடங்களில் நடத்த முடியாதென இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


பல வீடுகளில் திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுளள்ளார்.