இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களால் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி!!

797

கொரோனா..

நாட்டில் கோவிட் நோயாளிகளை சிகிச்சை நிலையத்திற்கு அழைத்து செல்வதற்கு போதுமான அளவு வாகனங்கள் இல்லாமையினால் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார அதிகாரிகள், சுகாதார அமைச்சிற்கு தெரிவித்துள்ளது.

சுகாதா அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே, சுகாதார பணிப்பாளர், பிரதேச சுகாதார சேவை பணிப்பாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தேவையான வாகனங்களின் எண்ணிக்கையை விரைவில் சுகாதார பணிப்பாளரிடம் அறிவிக்குமாறு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக்திற்காக வாடகை அடிப்படையில் வாகனம் பெற்றுக் கொள்ளப்படவுள்ள நிலையில் அதற்கான கொடுப்பனவு உலக வங்கியில் உள்ள அவசர பிரிவினால் வழங்கப்படுகின்றது.

முதல் கட்டத்தின் கீழ் கொழும்பு, கம்பஹா மற்றும் குருணாகல் மாவட்டத்திற்காக தேவையான வாகனம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.