கொரோனா பாதித்த தந்தைக்கு தண்ணீர் கொடுக்க போராடிய மகள் : பின்னர் நடந்த சோகம் : நெஞ்சை உலுக்கும் காட்சி!!

1185

ஆந்திராவில்..

இந்திய மாநிலம் ஆந்திராவில் ஒரு சிறுமி கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது தந்தைக்கு சாகும் தருவாயில் குடிக்க தண்ணீர் கொடுக்க போ.ராடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவிவருகிறது.

நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவம் ஆந்திராவில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்துள்ளது. விஜயவாடாவில் தங்கி வேலை பார்த்துவந்த 50 வயதான நபர், சமீபத்தில் சொந்த ஊரான ஸ்ரீகாகுளத்துக்கு திரும்பியுள்ளார்.

ஆனால் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரியவந்த நிலையில், ஊர் மக்கள் அவரை ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு குடிசையில் தங்க வைத்துள்ளனர். அதனால் அவரை கவனித்துக்கொள்ள யாரும் இல்லாமல் அவதிப்பட்டுவந்துள்ளார்.

இந்த நிலையில், அவருக்கு உடல் நிலை மோசமானதாகக் கூறப்படுகிறது. அவரது மனைவி, மகள் அவரைப் பார்க்கவந்தபோது, அவர் உயிருக்கு போ.ராடிய நிலையில் மண் தரையில் விழுந்து கிடந்துள்ளார்.

அதனைப் பார்த்து துடித்துப்போன அவரது மகள், தனது தந்தைக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க முயற்சித்துள்ளார். ஆனால், அருகில் சென்றால் மகளுக்கும் கொரோனா வந்துவிடும் என பயந்து சிறுமியின் தாய் அவரை தடுத்துள்ளார்.

இந்த போ.ராட்டத்தில், ஒரு வழியாக சிறுமி தனது தந்தைக்கு தண்ணீர் கொடுக்கிறார். ஆனால், சில நொடிகளில் அவர் மகளின் கண்முண்ணே துடிதுடித்து இ.றந்து விடுகிறார்.

அவரது கையை தூக்கி பார்த்து அசைவில்லை என தெரிந்த மகள், மண்ணில் புரண்டு க.தறி அழும் காட்சிகள் பார்ப்பவரின் நெ.ஞ்சை உ.லுக்குகிறது.

இந்த காட்சிகளை தூரத்தில் இருந்தபடி ஒருவர் தனது மொபைல் போனில் பதிவிட்டுள்ளார். அவை தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அ.திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.