இலங்கையில் எல்லைமீறும் கொரோனா தொற்று : கட்டுப்படுத்த முடியாத நிலையில் சுகாதார பிரிவு!!

1138

கொரோனா தொற்று..

இலங்கையில் நாளாந்தம் இரண்டாயிரத்தை அண்மித்த அளவில் கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதால் சுகாதார கட்டமைப்பிற்கு தாங்கிக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது அதிக அளவான தொற்றாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் 17000க்கும் அதிகமான தொற்றாளர்கள் வைத்தியசாலை சிகிச்சை பெற்று வருகின்றனர். எதிர்வரும் நாட்களிலும் 2000 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால் சுகாதார கட்டமைப்பிற்கு அதனை தாங்கிக் கொள்ள முடியாத நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அனைத்து மக்களும் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும், அரசாங்கம் மற்றும் சுகாதார பிரிவிற்கு மாத்திரம் அனைத்தையும் மேற்கொள்ள முடியாதெனவும் அவர் கூறியுள்ளார்.

-தமிழ்வின்-