ஆபத்தான கட்டத்தை நோக்கி நகரும் இலங்கை : அடுத்த வாரம் இன்னும் நெருக்கடி அதிகரிக்கலாம்!!

1048

கொரோனா..

மீண்டும் ஒருமுறை மேல் மாகாணத்தில் அதிக கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடமேல், தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் சம்மேளன தலைவர் எம்.பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது நாளாந்தம் 1900 என்ற அளவில் கோவிட் தொற்றாள்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில் அடுத்த வாரம் இன்னும் நெருக்கடி மிக்க வாரம் ஒன்று எதிர்பார்க்கப்படுவதாக பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை பொறுத்தவரையில் ஆபத்தான காலத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது. எனவே சுகாதார அதிகாரிகள் கொரொனாவின் மூன்றாவது அலையை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் பொலிஸாரும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் நேற்று 187 இடங்களில் சோதனைகளை நடத்தியுள்ளனர்.

அவற்றில் 152 உடற்பயிற்சிகள் அகங்கள், தினப்பராமரிப்பு நிலையங்கள், பிரத்தியேக வகுப்புக்கள் மற்றும் விருந்தகங்கள், உணவகங்கள் என்பன அடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-