2012 உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கககளின் பல்கலைக்கழக விண்ணப்பங்கள் அடுத்த வாரம் முதல்..!

576

2012ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்காக அடுத்த வாரம் முதல் விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப படிவங்கள் அடங்களான புத்தகம் அச்சிடும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக அவ் ஆணைக்குழுவின் தலைவி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த புத்தகத்தை அடுத்த வாரத்திற்குள் விநியோகிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாணவர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் கிடைக்கப் பெற்றதன் பின்னர் பல்கலைக்கழங்களிற்கு தெரிவான மாணவர்களை இவ்வாண்டு இறுதிக்குள் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.