பொய் சொன்னால் இனி மாட்டிக்கொள்வீர்கள் : நவீன மென்பொருள் கண்டுபிடிப்பு!!

334

Poi

பிரிட்டனில் பொய் எழுதினால் கண்டுபிடிக்கும் மென்பொருள் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள எசெக்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மஸ்சிமோ போசியோ மற்றும் இத்தாலியின் டொமாசோ போர்னசியாரி ஆகிய இரு விஞ்ஞானிகள் சேர்ந்து பொய் எழுதினால் அதை கண்டுபிடிக்கும் மொன்பொருளை உருவாக்கியுள்ளனர்.

ஒரு பத்தியில் ஒரு குறிப்பிட்ட வார்த்தை எத்தனை தடவை இடம்பெற்றுள்ளது என்பதை கண்டறியும் அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மென்பொருள் திறம்பட செயல்படுகிறதா என்பதை அறிய இத்தாலி நீதிமன்றங்களில் சாட்சிகளும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் அளித்த வாக்குமூலங்களை படித்து சோதிக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

மேலும் ஒன்லைனில் இடம்பெறும் புத்தக விமர்சனங்கள், ஹோட்டல்கள் பற்றிய விவரங்களிலும் பொய்யை கண்டுபிடிப்பதற்கும் பயன்படுவதால் ஒன்லைன் புத்தக விமர்சனங்களை அதன் ஆய்வுக்கு உட்படுத்தும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.