நடுவானில் குலுங்கிய விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது!!

326

Flight11

கனடாவில் இருந்து புறப்பட்டு மெக்சிகோ நோக்கி பறந்து கொண்டிருந்த விமானம் அமெரிக்காவில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது.

கனடாவின் தனியார் விமான நிறுவனமான சன்விங் ஏர்லைன்ஸ் 181 பயணிகளுடன் கனடாவிலிருந்து மெக்சிகோ நேற்று பறந்து கொண்டிருந்தது.

அப்போது காற்றில் ஏற்பட்ட மாறுபாட்டினால் விமானம் குலுங்க தொடங்கியதால், பயணிகளுக்கு உதவும் ஊழியர் ஒருவர் தலையில் பலத்த காயமடைந்ததுடன், மற்றொரு பணிப்பெண்ணும் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

இதனையடுத்து அவ்விமானம் அமெரிக்காவின் மான்டெனா பகுதியில், ஹெலினா பிராந்திய விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது, இதன்பின் இரு விமான ஊழியர்களும் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சுமார் ஐந்து மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் நேற்று மாலை மற்றொரு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் பயணிகள் அனைவரும் அவர்களது சீட் பெல்டுகளை அணிந்து கொண்டிருந்ததால் எவருக்கும் பாதிப்பென்றும் இல்லை என சன்விங் நிறுவனத்தின் தகவல் தொடர்பாளரான ஜெனைன் சாப்மென் தெரிவித்துள்ளார்.