இலங்கை ஜனாதிபதி ஒருவர் முதன் முறையாக தன்சானியா விஜயம்..!

423

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்சானியாவுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டு தன்சானியா செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது இரு நாடுகளுக்குமிடையே ஒப்பந்தங்கள் பலவும் கைச்சாத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தன்சானியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் சுற்றுலா துறைகளை பலப்படுத்திக் கொள்வது ஜனாதிபதியின் இவ் விஜயத்தின் பிரதான நோக்கமாகவுள்ளது.

இச் சுற்றுப் பயணத்தின் போது தன்சானியாவில் இடம்பெறும் பல மாநாடுகளிலும் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி ஒருவர் தன்சானியாவுக்கான விஜயத்தை மேற்கொள்வது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.