அதிரடிப் பிரச்சாரத்தால் வாக்காளர்களை ஈர்க்கும் நக்மா!!

305

Nagma

கடுமையான உழைப்பின் மூலம் வாக்காளர்களை ஈர்ப்பேன் என்று நடிகை நக்மா கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட மீரட் தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நடிகை நக்மா அத்தொகுதியில் நடந்த அக்கட்சியின் ஊழியர் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், நடிகை என்ற காரணத்தால் வாக்காளர்களை ஈர்க்க நான் விரும்பவில்லை. கடுமையான உழைப்பின் மூலம் அவர்களை ஈர்த்து இங்கு வெற்றி பெறுவேன்.

மேலும் கடந்த 10 வருடங்களாக நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறேன். நடிப்பு தொழிலில் கடுமையாக உழைத்தது போலவே அரசியலிலும் கடுமையாக உழைத்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான ராஷ்டிரிய லோக் தள கட்சிக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், மத்திய அரசு விவசாயிகளுக்கென உருவாக்கிய பல நல்ல திட்டங்களை அம்மாநில சமாஜ்வாதி அரசு செயல்படுத்த தவறியதாக குற்றஞ்சாட்டினார்.

வரும் 19ம் திகதி அந்நகரில் நடைபெறும் மாபெரும் பேரணியிலும் நக்மா கலந்து கொள்ள உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.