பிறந்த 5 நாட்களில் உலக சாதனை படைத்த குழந்தை!!

15

baby record by get aadhaar in 5 days : கர்நாடகாவை சேர்ந்த குழந்தை பிறந்த 5 நாட்களில் ஆதார் அட்டை பெற்று உலக சாதனை படைத்துள்ளது.
பிறந்த 5 நாட்களில் ஆதார் பெற்ற குழந்தை

கர்நாடக மாநிலம், கொப்பல் மாவட்டம் கங்காவதிக்கு அருகே உள்ள ஸ்ரீராம்நகரை சேர்ந்தவர்கள் மருத்துவர்கள் ஏ.பவன் குமார் மற்றும் வரலட்சுமி பாலா தம்பதி.

இந்த தம்பதிக்கு கடந்த மே 1 ஆம் திகதி பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அஞ்சூரி ராயங்கா திரிநயனி என பெயரிட்டனர். குழந்தை பிறந்த சில நாட்களில், பிறப்பு சான்றிதழை பெற்றதுடன், மே 6 ஆம் திகதி அதனை வைத்து ஆதாருக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இந்த ஆவணங்களை சரிபார்த்த மத்திய அரசின் UDI, குழந்தைக்கான ஆதார் அட்டைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் ஆதார் அட்டை பெறும் மிக இளயை குழந்தை என்ற சாதனையை அஞ்சூரி ராயங்கா படைத்தது.

இதற்காக international book of records என்ற நிறுவனம், குழந்தைக்கு உலக சாதனை பதக்கமும், சான்றிதழும் வழங்கி கௌரவித்துள்ளது.

முன்னதாக குழந்தை பிறந்து 15 நாட்களுக்கு பிறகு ஆதார் கார்டு பெறப்பட்டதே உலக சாதனையாக இருந்த நிலையில், தற்போது 5 நாட்களில் ஆதார் பெற்று இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ‘பால்தார்’ எனப்படும் நீல நிற ஆதார் அட்டை வழங்கப்படுகிறது.

இதனை பெற குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோர் ஒருவரின் ஆதார் அட்டை போதுமானது. குழந்தைகளுக்கு 5 மற்றும் 15 வயது பூர்த்தியாகும் போது, அவர்களின் கைரேகை மற்றும் கண்விழி ரேகையைப் புதுப்பிக்க வேண்டும்.